×

மேற்கு வங்கத்தில் 8வது வாக்காளர் துணைப்பட்டியல் வெளியீடு

மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு 60லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி நீதிபதிகளால் பரிசீலனை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசீலனையில் இருந்தவர்களில் சுமார் 52 லட்சம் பேரின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து 8வது துணை வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள சுமார் 8 லட்சம் பேரின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த நான்கு நாட்களுக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சிறப்பு தீவிர திருத்த பணியில் இருந்த நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : West Bengal ,Supreme Court ,
× RELATED எனது மவுனத்தை தோல்வியாக கருதாதீர்கள்:...