×

எனது மவுனத்தை தோல்வியாக கருதாதீர்கள்: ஆம் ஆத்மி தலைமை மீது எம்பி ராகவ் சதா சாடல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணை தலைவராக இருந்த எம்பி ராகவ் சதாவை நீக்கக்கோரி கட்சி சார்பில் நேற்று கடிதம் வழங்கப்பட்டது. இது குறித்து எம்பி ராகவ் சதா தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட வீடியோவில்,”எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்கள் சார்ந்த பிரச்னைகளை குறிப்பாக கவனிக்கப்படாத தலைப்புக்களையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் நான் எழுப்பி வருகிறேன்.

ஆனால் மக்களின் பிரச்னைகளை பற்றிப் பேசுவது ஒரு குற்றமா? நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? நான் பேசுவதற்கு வாய்ப்பளிக்க கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. நான் அவர்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். எனது மவுனத்தை தோல்வியாக கருதாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Raghav Sadat ,Aam Aadmi Party ,New Delhi ,Rajya Sabha ,
× RELATED பெட்ரோலிய பொருட்கள், எல்பிஜி காஸ்...