×

10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் பணியை தொடங்கியது சிபிஎஸ்இ!

டெல்லி: தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய கல்வி வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மும்மொழிப் பாடத்திட்டம் (Three-Language Formula) பள்ளிகளில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆண்டு முதல் 6-ஆம் வகுப்பில் மூன்று மொழிகள் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அடுத்த ஆண்டு அது 6 மற்றும் 7-ஆம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும். இறுதியில், 2031-ஆம் ஆண்டுக்குள் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழிப் பாடத்திட்டம் முழுமையாகக் கட்டாயமாக்கப்படும். இதில் மிக முக்கியமாக, மாணவர்கள் பயிலும் மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பன்முகத் திறனை வளர்க்கும் நோக்கில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் உடற்கல்வி, கலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகியவை கட்டாயப் பாடங்களாக்கப்பட்டுள்ளன. கல்வித்துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்தச் சீர்திருத்தங்கள், 2026-27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு முதன்முதலில் அமல்படுத்தப்படும்.

இந்தப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள், 2028-ஆம் ஆண்டில் தங்களது முதல் புதிய முறை போர்டு தேர்வை (Board Exam) எதிர்கொள்வார்கள் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

Tags : CBSE ,Delhi ,Central Board of Education ,
× RELATED இரண்டாம் கட்ட பரப்புரை தொடக்கம்:...