×

லாலாப்பேட்டை அருகே ரூ.26.10 லட்சத்தில் தார்சாலை

லாலாபேட்டை, ஏப். 3: லாலாபேட்டை அருகே விட்டுக்கட்டியில் ரூ.26.10 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தலவாடி ஊராட்சி வெட்டுகட்டி இருந்து கீழ சிந்தலவாடிக்கு சுமார் 600மீட்டர் தார் சாலை செல்கிறது. சாலையின் ஜல்லிக்கட்டு சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் அந்த சாலை வழியாக விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு சென்று வரவும், விவாசயிகள் தங்களது நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளை பொருட்களை வாகனங்களில் ஏற்றுவதற்கும் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசிற்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 26.10 லட்சம் மதிப்பில் சிறு பாலத்துடன் கூடிய புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தங்களின் கோரிக்கை ஏற்று புதிய தார்சாலை அமைத்து தந்த தமிழ்நாடு திராவிட மாடல் அரசியல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

 

Tags : Lalapettai ,Vettikatty ,Chinthalavadi ,Krishnarayapuram ,Karur ,Keezh Chinthalavadi.… ,
× RELATED கரூர் மாநகராட்சியில் கொசுக்களை...