×

தேர்தலை முன்னிட்டு வாகன சோதனையில் ரூ.55 ஆயிரம் பறிமுதல்

கரூர், ஏப். 3: கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவற்றால் இதுவரை ரூ. 55 ஆயிரம் அளவில் பணம் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த மார்ச் 15ம்தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முறையான ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை 6 மணி வரை இந்த குழுவினர் ரூ.55 லட்சத்து 68 ஆயிரத்து 960 பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, முறையான ஆவணங்கள் சமர்ப்பித்ததால் ரூ. 53 லட்சத்து 42 ஆயிரத்து 460 ஐ திருப்பி வழங்கியுள்ளனர். தற்போதைய நிலையில், ரூ. 2லட்சத்து 26 ஆயிரத்து 500 மட்டுமே இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.

 

Tags : Karur ,Flying Squad ,Standing Vigilance Team ,Karur district ,Tamil Nadu Assembly ,
× RELATED லாலாப்பேட்டை அருகே ரூ.26.10 லட்சத்தில் தார்சாலை