×

கரூரில் வேட்பு மனுதாக்கல்: துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

 

கரூர், மார்ச். 31: வேட்புமனு தாக்கலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி கடந்த மார்ச் 15ம்தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 30ம்தேதி முதல் ஏப்ரல் 6ம்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் நேற்று காலை வேட்புமனு தாக்கல் நிகழ்வு நடைபெற்றது. கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி, கரூர் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள தற்காலிக கோட்டாட்சியர் அலுவலகத்தின் இருபுறமும் பேரிகார்டு வைத்து மறைக்கப்பட்டிருந்தது. இருபுறமும் ஏராளமான போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேட்பாளர் 5 பேர்களுக்கு மேல் செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், ஆஸ்பத்திரி சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகே வேட்பாளர்களை உள்ளே அனுப்பிவைத்தனர். தேர்தல் திருவிழாவின் முதற்கட்ட நிகழ்வான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியுள்ளதால் ஏப்ரல் 23ம்தேதி வரை இதன் தாக்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Karur ,Tamil Nadu Assembly ,
× RELATED தரகம்பட்டியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி