×

கரூர் மாவட்டத்தில் கோடைவெப்பம் அதிகரிப்பு

கரூர், ஏப். 1: கரூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பைபாஸ் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டம் முழுதும் சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. தினமும் 100 டிகிரியை தாண்டியும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது.இந்த வெயில் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். கரூர் மாநகரச் சுற்றிலும் கரூர் முதல் கோவை, சேலம், மதுரை, ஈரோடு, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு பைபாஸ் சாலைகள் செல்கின்றன.

இந்த சாலைகளில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறும். இந்நிலையில், அதிகளவு வெயில் காரணமாக பைபாஸ் சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியே காணப்படுகிறது. இந்த சாலைகளில் பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில்தான் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது. கோடையின் தாக்கம் குறையும் சமயத்தில்தான் வாகன போக்குவரத்தும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

 

 

Tags : Karur ,
× RELATED கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி