×

கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி

கரூர், ஏப். 1: கரூர் சேலம் பைபாஸ் சாலையின் வழியாக அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கரூர் சேலம் பைபாஸ் சாலையில் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

கருர் சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆவாரங்காட்டுபுதூர் பிரிவு அருகே வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சின்னவரப்பாளையத்தை சேர்ந்த குணா என்பவர் உரிய அனுமதியின்றி 2 யூனிட் சாதாரண கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, கனிமத்துடன் வந்த வாகனத்தை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags : Karur-Salem ,Karur ,Geology and Mining Department ,Karur District Geology and Mining Department… ,
× RELATED கரூர் அருகே விவசாயிகளுக்கு மானிய விலையில் வான்கோழி விற்பனை