தொழிற்சங்க பெயர் பலகை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

கம்பம், பிப். 19: கம்பம் வேலப்பர்கோயில் காந்திஜி வீதி தெருவில் ஆட்டோக்கள் நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகம் முன், சிஐடியு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆட்டோ நிலைய பெயர் பலகை வைக்கப்பட்டது. இப்பெயர் பலகையை அகற்றுமாறு மருத்துவமனை உரிமையாளர் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார்கள் ஆட்டோ தொழிலாளர் சங்க பேரவை பெயர் பலகையை அகற்ற முயன்றனர். இதை கண்டித்து அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசாரை முற்றுகையிட்டனர். இதில், சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்க எரியா தலைவர் லெனின், செயலாளர் பாலகுருநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு ஜெயராஜ், ஏரியாக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், காஜா, அய்யப்பன் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் தொழிற்சங்க பலகையை அகற்றக் கூடாது என்று கோஷமிட்டனர். மேலும் தனியார் நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் கீதா, ஆட்டோ தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்பு ஆட்டோ தொழிலாளர்கள் பெயர் பலகையை அருகே உள்ள இடத்தில் மாற்றி அமைக்க சம்மதித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: