வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ராஜபாளையம், ஏப்.1: ராஜபாளையத்தில் வாக்குச்சாவடிகளை பொது தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், அன்னப்பராஜா சோதனைச் சாவடி மற்றும் தளவாய்புரம் சோதனைச் சாவடி அருகில் பறக்கும் படைக் குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், செட்டியாபட்டி கிராமம் தளவாய்புரத்தில் அமைந்துள்ள அம்மையப்ப நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண்கள் 181, 182, 185, 186 ஆகியவற்றை பொதுத் தேர்தல் பார்வையாளர் உதயன் மிஸ்ரா ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் தேர்தல் நடத்தும் அலுவலர் அமர்நாத், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு ஏற்பாடுகளை பரிசோதித்தனர். தேர்தல் நடைமுறைகள் சீராக நடைபெற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.