மறியலில் ஈடுபட்ட 95 பேர் மீது வழக்கு

வருசநாடு, ஏப். 1: கடமலைக்குண்டு அருகே உள்ள தேவராஜ்நகரில் ஸ்ரீசீதாளகாளியம்மன் கோயிலுக்கு அன்னதான தகர செட் அமைப்பதற்கு தடை விதித்ததை கண்டித்து நேற்று முன்தினம் பொதுமக்கள் தேனி பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆண்டிபட்டி டி.எஸ்.பி சிவசுப்பு, ஆண்டிபட்டி தாசில்தார் ஜாகிர் உசேன், கடமலைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து போகும்படி பொதுமக்களை அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேவராஜ்நகரை சேர்ந்த 95 பேர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.