உசிலம்பட்டி, ஏப். 1: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23ம் தேதி நடைபெறும் நிலையில், உசிலம்பட்டியில் உள்ள டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த மையங்களில் வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வேத்பதி மிஸ்ரா நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார், தாசில்தார் கார்த்திகேயன் உடனிருந்தனர்.
