மதுரை, ஏப். 1: மதுரை மாவட்ட கால்பந்து சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி மதுரை, ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் கே.புதூரில் உள்ள தொன்போஸ்கோ ஐடிஐ மைதானங்களில் நடந்து வருகிறது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ‘ஏ’ பிரிவு போட்டிகளும், தொன்போஸ்கோ ஐடிஐ மைதானத்தில் ‘பி’ பிரிவு போட்டிகளும் நேற்று நடந்தது.
இதில் தலா 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், அனைத்து அணிகளுடனும் ஒருமுறை விளையாட வேண்டும். இதன்படி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் மதுரை போலீஸ் அணியை 5:0 என்ற கோல் கணக்கில் சேது பொறியியல் கல்லூரி அணி வென்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகள், மாநில அளவிலான கால்பந்து லீக் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
