×

பழநி அன்னதான மையங்களில் ஆய்வு

பழநி, ஏப். 1: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இவ்விழா கடந்த மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது. தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு வழிநெடுகிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இங்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உணவு தயாரிக்க பயன்படும் மளிகை மற்றும் காய்கறிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கையுறை மற்றும் தலையுறைகள் அணிந்து உணவுகளை சமைக்க வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்களை உணவுகளில் சேர்க்க கூடாது. உணவு விநியோகிக்கப்பவர்கள் சுகாதாரமான உடைகள் மற்றும் கையுறைகள் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

 

Tags : Palani Ananana Centers ,Palani ,Panguni Uthram ,Palani Dandayudapani Swami Temple ,
× RELATED பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி...