பாபநாசம் வடக்கு ஒன்றிய விசிக நிர்வாகி நியமனம்

தஞ்சாவூர், ஏப்.1: விடுதலை சிறுத்தை கட்சியின் மறு சீரமைப்பு நடவடிக்கையின் படி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் உத்தரவின் படி, விடுதலை சிறுத்தை கட்சியின் பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளராக சம்சா.ரமேஷை பாபநாசம் சட்டமன்ற தொகுதியின் மாவட்ட செயலாளர் நதியா முத்தமிழ் செல்வன் நியமனம் செய்து அறிவித்துள்ளார். பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சம்சா.ரமேஷ்க்கு மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் சார் பணி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Related Stories: