திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

தஞ்சாவூர்,ஏப்1 திரு வை யாறு தாலுகா அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவின பார்வையாளர் சஞ்சீவ்குமார் ஆய்வு மேற்கொண்டார். திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் சஞ்சீவ்குமார் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, கணக்கு குழு, வீடியோ குழுவினர் ஆகியோர் இதுவரை செய்த பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

மேலும், தற்போது செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முருககுமார், விவேகானந்தன் பார்த்திபன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

Related Stories: