மயிலாடுதுறை: மயிலாடுதுறை அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. குத்தாலம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதிமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளருமான பவுன்ராஜ் மீதும் சரமாரி புகார் எழுந்துள்ளது.
