×

நீர்நிலைகள் வறண்டதால் பப்பாளி விவசாயத்தில் சிக்கல்

 

தேவாரம், மார்ச் 31: தேவாரம் பகுதியில் நீர்நிலைகள் வறண்டதால் பப்பாளி விவசாயம் சுருங்கி வருகிறது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பப்பாளி விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 900 ஏக்கர் வரை பண்ணைப்புரம் பகுதியில் நடந்தது. இடை காலங்களில், குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போதிய மழை இல்லாத நிலையில் பப்பாளி விவசாயம் சுருங்கியது. அப்போது அனைத்து கண்மாய்கள், குளங்களும் மழை நீர் இல்லாதததால் வறண்டன. இருப்பினும் பப்பாளி விவசாயத்தை விவசாயிகள் கைவிடவில்லை. விவசாயத்தை பொறுத்தவரை மழை, தண்ணீர் நிர்வாகம் மிகவும் அவசியம்.

வழக்கம்போல் பெய்யும் வடகிழக்கு பருவமழை, கோடைமழை, தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்வதில்லை. நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் உள்ளனர். இதனால் தேவாரம் பகுதியில் பப்பாளி விவசாயம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பருவமழை தொடர்ந்து பெய்யும் காலத்தில் பப்பாளி விவசாயம் பரவலாக இருக்கும் என்பதால், தண்ணீரை உரிய முறையில் சேமிக்கவும், பப்பாளி விவசாயத்தை ஊக்குவிக்கவும் வேளாண்மைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

Tags : Thevaram ,Gombai ,Pannapuram ,Bodi ,Uttampalayam ,Theni ,
× RELATED அரியலூர், ஜெயங்கொண்டத்தில் 100 சதவீதம்...