சின்னமனூர், மார்ச் 31: சின்னமனூர் அருகே தொழிலாளியை கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சூர்யா (35). வாழைக்காய் வெட்டும் தொழிலாளியான இவருக்கு மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை தோட்டத்தில் வாழைக்காய்களை வெட்டி பணிகளை செய்து விட்டு வேனில் எரசக்கநாயக்கனூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டீக்கடை முன்பு வந்து இறங்கினார்.
அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் சூர்யாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனூர் போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குபதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
