×

பெற்றோரை கவனிக்க தவறினால் சம்பளத்தில் 15% பிடித்தம்: தெலங்கானாவில் புதிய மசோதா நிறைவேற்றம்

ஐதராபாத்: பெற்றோரைப் புறக்கணிக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்தம் செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய மசோதா தெலங்கானாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா ஊழியர்கள் பொறுப்புக்கூறுதல் மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதை கண்காணித்தல் மசோதா, 2026க்கு மாநில சட்டமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவை அறிமுகம் செய்து முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில்,‘‘மூத்த குடிமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய தெலங்கானா பேரவை புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது, தற்போதுள்ள மத்திய சட்டங்களை விட மேம்பட்டதாக உள்ளது. ஏற்கனவே பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2007 என்ற தேசிய சட்டம் உள்ளது. புதிய மசோதா பொது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனியார் ஊழியர்களையும் உள்ளடக்கும்.

பொதுப் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகிறது. இதைக் கடைப்பிடிக்கத் தவறினால், பெற்றோருக்கு சம்பளத்தில் 15% அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது குறைவோ பிடித்தம் செய்யப்படும். பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளைத் திருத்துவது சமூகத்தின் பொறுப்பாகும். ஒரு சமூகப் பொறுப்பாக, இந்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது ’’ என்றார்.

Tags : Telangana ,Hyderabad ,
× RELATED காஷ்மீர் அணிக்கு மோடி பாராட்டு