×

தேர்தலில் பணத்திற்கு சீட் வழங்கியதாக சர்ச்சை காங். தலைவர்கள் மீதான புகார் தீவிரமானது: முதல்வர் பினராயி விஜயன் கருத்து

மலப்புரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறியதாவது: அரியானா பேரவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அவர்களது நெருங்கிய உதவியாளர்களும் கட்சி டிக்கெட்டுகளுக்காக வேட்பாளர்களிடம் இருந்து பெரும் தொகையைக் கோரியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குற்றச்சாட்டுகளில் தீவிரம் இருந்தபோதிலும், கட்சித் தலைமை ஏன் மவுனம் காக்கிறது.

குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றால், காங்கிரஸ் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை?. கட்சியின் முடிவெடுக்கும் மட்டங்களில் இருந்து வெளிவரும் அறிக்கைகள், உட்கட்சி வெளிப்படைத்தன்மை இல்லாததையே சுட்டிக்காட்டுகின்றன. பணம் அடிப்படையில் தேர்தல் டிக்கெட்டுகளை வழங்குவது ஜனநாயக சமத்துவத்தையும் கொள்கை அடிப்படையிலான அரசியலையும் சீர்குலைக்கிறது. இதுபோன்ற நடைமுறைகள் சாதாரண கட்சித் தொண்டர்களின் அபிலாஷைகளை அழிக்கின்றன என்றார்.

Tags : Congress ,Chief Minister ,Pinarayi Vijayan ,Malappuram ,Kerala ,Haryana Assembly ,
× RELATED காஷ்மீர் அணிக்கு மோடி பாராட்டு