×

ஊடுருவலை தடுத்தால் மட்டும் போதாது அசாமில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்ப வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு

அசாமில் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அசாமின் சோனித்பூர் மாவட்டம் தேகியாஜூலி பகுதியில் நேற்று நடைபெற்ற பிரசார பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: அசாமில் சட்டவிரோத ஊடுருவல்களை தடுப்போம் என பத்து ஆண்டுகளுக்கு முன் பாஜ சபதம் செய்தது.

அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றி உள்ளது. ஆனால், ஊடுருவலை தடுப்பது மட்டும் போதாது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அசாமில் உள்ள ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளையும் அவர்களின் சொந்த ஊர்களுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். ஊடுருவல்காரர்கள் அசாமில் உள்ள பழங்குடியினரின் வேலைவாய்ப்புகளை பறித்து கொண்டனர். ஏழைகளின் உணவு தானியங்களை கைப்பற்றி கொண்டனர்.

ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அரசாங்கத்தால் மீட்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் எந்த நிலமும் ஊடுருவல்காரர்களிடம் இல்லை என்பதை சர்மா உறுதி செய்வார். சட்டவிரோத ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர். அவர்களின் நோக்கம் நிறைவேற விட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Assam ,Union Minister ,Amit Shah ,Deghiajuli ,Sonitpur ,Assam… ,
× RELATED திருமணமானவருடன் விவாகரத்து பெறாமல்...