- பாஜக
- மம்தா பானர்ஜி
- மேற்கு வங்கம்
- கொல்கத்தா
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் அரசு
மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29 தேதிகளில் 2 கட்டமாக பேரவை தேர்தல் நடக்கிறது. நேற்றுமுன்தினம் கொல்கத்தாவில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை,எஸ்ஐஆர் ,வங்கதேசத்தவர் ஊடுருவல் போன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து அனுதாபத்தை தேட முயற்சிக்கிறார் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா மீது குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், புருலியாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், நான் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், ஆனால் அவர்கள் எல்லா அதிகாரங்களையும் பறித்துவிட்டார்கள். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ராம நவமி அன்று நடந்த வன்முறைக்கு பாஜவே காரணம். என்னை குறை சொல்லாதீர்கள். எனது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகளும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
பாஜ ஆட்சிக்கு வந்தால் மக்கள் உண்ணும் உணவிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நீங்கள் மீன், மாமிசம் ஏன் முட்டை கூட சாப்பிட முடியாது. அதேபோல் இப்போது நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிடும். என் மீது அபாண்டமாக குற்றசாட்டுகளை அமித்ஷா சொல்லியுள்ளார். ஆனால், உண்மையில் கடந்த கால செயல்களுக்காக ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
