×

அசாமில் 90 இடங்களை கைப்பற்றுவோம்: அமித்ஷா உறுதி

 

கவுகாத்தி: 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவையில் 90-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று, தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். கவுகாத்தியில் நடத்திய ஒரு பிரம்மாண்டமான பேரணியில் அவர் பேசும் போது,’அசாம் மக்கள் மாநிலத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைப்பதில் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். 90-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம்.

பிரதமர் மோடி, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரின் தலைமையின் கீழ், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அசாமில் தீவிரவாதம், குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் முற்றிலுமாக நின்றுவிட்டன. இங்கு சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திற்கும் சுகாதாரம் மற்றும் கல்வியின் மையமாக அசாம் உருவெடுத்துள்ளது’ என்றார்.

Tags : Assam ,Amit Shah ,Guwahati ,Home Minister ,National Democratic Alliance ,Assam Assembly ,Guwahati… ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...