×

பெங்களூருவில் மாணவரை பயங்கரவாதி என்று திட்டிய பல்கலை பேராசிரியர் மீது வழக்கு

 

பெங்களூரு: பெங்களூருவில் தனியார் பல்கலைக்கழகத்தில், வகுப்புக்கு இடையூறு அளித்துவந்த மாணவர் ஒருவரை மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதி என்று பேராசிரியர் திட்டினார். மற்ற மாணவர்கள் மத்தியில் பலமுறை மாணவரை பயங்கரவாதி என்று திட்டியதுடன், ஈரான் போர் உங்களை போன்ற நபர்களால் தான் நடக்கிறது என்று கூறியதுடன், உங்களை எல்லாம் டிரம்ப் அழித்துவிடுவார் என்று மிக மோசமான விதத்தில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

கடந்த 24ம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில், இதுதொடர்பாக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட பேராசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இணையத்தில் வைரலான வீடியோவின் அடிப்படையில் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி இருக்கின்றனர்.

Tags : Bengaluru ,Iran ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...