×

ஓசூர், சூளகிரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் ஆய்வு

ஓசூர், மார்ச் 29: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா ராணி, தாசில்தார் ரமேஷ், தனி தாசில்தார்கள் வருவாய் ஆய்வாளர் ரத்தினம், மாவட்ட கல்வி அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஓசூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுவதை கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் முகமது சபீர் ஆலம், ஓசூர் சப் கலெக்டர் ஆக்ரித்தி சேத்தி, தாசில்தார் குணசிவா, தொடக்கக்கல்வி அலுவலர் ரமாதேவி, தனி தாசில்தார்கள் சண்முகம், சுப்பிரமணி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Hosur ,Choolagiri ,Choolagiri Government Boys Higher Secondary School ,Krishnagiri district ,District Election Officer ,Collector ,Dinesh Kumar ,Veppanahalli… ,
× RELATED கோடை வெயில் தாக்கத்தால் உதிர்ந்து விழும் மாம்பிஞ்சுகள்