போச்சம்பள்ளி, மார்ச் 29: காவேரிப்பட்டணத்தில் இருந்து சந்தாபுரம் கூட்ரோடு சாலை வழியாக தளிகைப்பட்டி, வேலம்பட்டி, சந்தூர் கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழித்தடங்களுக்கு செல்ல கூடிய பிரதான சாலையாக உள்ளது. இதன் வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் அப்பகுதியில் பல குடிருப்பு உள்ளது. இந்நிலையில், சந்தாபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள, இரு மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பங்கள் உள்ள பகுதி, மின்சார அலுவலகம் முன்பு உள்ளது. இந்த மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது தெரிந்தும், மின்சார வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சாய்ந்த மின்கம்பங்கள் கம்பியின் உதவியோடு நின்றபடி உள்ளது. மின்கம்பம் சாய்ந்து பெரும் விபத்து ஏற்படுவதற்குள், இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
