தேவிகுளம் தொகுதியில் செல்லதுரை என்பவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார்: அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பு

சென்னை: தேவிகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் செல்லதுரை என்பவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார் என அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளராக செல்லத்துரை 09.04.2026 அன்று நடைபெறவுள்ள கேரள மாநில, தேவிகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் “தென்னந்தோப்பு” சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: