நவரை பட்டத்தில் அறுவடை மும்முரம் நெல் உலர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

*ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மூட்டைகள் குவிகிறது

காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவரை பட்டத்தில் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் விற்பனைக்கூடங்களில் நெல் மூட்டைகள் குவிகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நவரைப் பருவத்தில் விவசாயம் செய்த நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடம், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொண்டு வந்து குவித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நெல் வியாபாரிகளும் களத்தில் இறங்கி, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நவரைப் பட்டத்தில் கோ-51,ஏடிடி-36, உள்ளிட்ட நெல் ரகங்கள் அறுவடை செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, காவேரிப்பாக்கம் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். இதில் அறுவடை செய்த நெல் மூட்டைகளில் ஈரப்பதம் இருப்பதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள நெல் களத்தில் விவசாயிகள் உலர்த்தும் பணியில் நேற்று ஈடுபட்டுள்ளனர். இதனால் நெல்லின் ஈரப்பதம் குறைந்தால், கூடுதல் விலைப் போகும் என்பது விவசாயிகள் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று கோ-51,ரக நெல் குறைந்த பட்சமாக ரூ 1300-ம், அதிகபட்சமாக ரூ 1380-ம், கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மகேந்திரா 606-ரக நெல் குறைந்த பட்சம் விலை ரூ1500-க்கும், அதிக பட்ச விலை ரூ 1557-க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அம்மூரில் 5,740 நெல் மூட்டைகள் குவிந்தது

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் 5,740 நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தது. இதில் 606 ரக நெல் மூட்டைகள் அதிகபட்ச விலையாக ரூ.2,020க்கு விற்பனையானது. நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் பின்வருமாறு:ஏடிடி 36 ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,209க்கும் அதிகபட்சமாக ரூ.1,630க்கும், ஏடிடி 37 வகை ரக குண்டு நெல் குறைந்தபட்சம் ரூ.1,050க்கும், அதிகபட்சமாக ரூ.1,420க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கோ 51 வகை நெல் குறைந்தபட்சம் ரூ.1,100க்கும் அதிகபட்சமாக ரூ.1,436க்கும், 606 ரக குறைந்தபட்ச விலை ரூ.1,319க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2,020க்கும், 16/38 ரகம் ரூ.1,669க்கும், ஆர்.என்.ஆர் ரக நெல் குறைந்தபட்சம் ரூ.1,659க்கும் அதிகபட்சமாக ரூ.1,960க்கும், அமோகா ரக நெல் குறைந்தபட்சம் ரூ.1,735க்கும் அதிகபட்சமாக ரூ.1,769க்கும், என்.எல்.ஆர் ரக நெல் ரூ.1,635க்கும், ரக நெல் ரூ.1,899க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: