குஜராத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 2300 கிலோ போதைப்பொருள் மாயம்: CAG அதிர்ச்சி தகவல்

குஜராத்: குஜராத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 2300 கிலோ போதைப்பொருள் மாயமானதாக CAG அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக நாட்டிலேயே போதைப்பொருளின் கடத்தல் மையமாக குஜராத் மாநிலம் உருவெடுத்ததாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருள் குஜராத்தில் ராணிக்கு சொந்தமான துறைமுகம் வழியாக கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்த சூழலில் இந்திய தணிக்கை மற்றும் கணக்காய்வுத் தலைவர் வெளியிட்ட சமீபத்தில் அறிக்கையில் குஜராத்தில், 2010-2022 காலகட்டத்தில் அம்மாநில போலீசார் 6,510 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்ததாகவும், அதில் 4,177 கிலோ போதைப்பொருளை அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள 2,332 கிலோ மயமானதாக எழுந்த புகாரை அடுத்து போதைப்பொருள் திருடுபோனதாகவும் எலிகள் அவற்றை சாப்பிட்டதாகவும் குஜராத் காவல் துறை விளக்கம் அளித்ததாக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: