சிலிண்டர் தட்டுப்பாடு: நெல்லை சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தம்

 

நெல்லை: சிலிண்டர் தட்டுப்பாட்டால் நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையிலான மேற்காசிய போர் பதற்றத்தால் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வணிக கியாஸ் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஓட்டல்கள், டீக்கடைகளில் உற்பத்தியை பாதிக்க செய்திருப்பதுடன், விலைவாசியையும் உயர்த்தி உள்ளது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு திருநெல்வேலியின் அடையாளமாக திகழும் ‘அல்வா’ தயாரிப்பையும் விட்டுவைக்கவில்லை. நாள்தோறும் 600 கிலோவுக்கு மேல் அல்வா தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் 15 இடங்களில் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடை உள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் அல்வா தயாரிப்பு பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கார வகைகள் மட்டுமே சாந்தி ஸ்வீட்ஸ் கடைகள் விற்பனை செய்யப்படுகிறது. திருச்செந்தூர், நெல்லையப்பர் கோயிலில் இருந்து அல்வா வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: