சென்னை: திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, மஜக, கருணாஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. நேற்று மாலை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் திமுக குழுவை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மனிதய நேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து, எஸ்டிபிஐ கட்சி தலைவர் தெகலான் பாகவி தலைமையிலான நிர்வாகிகள் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் திமுக குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மஜக, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆகிய 3 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தலா ஒரு தொகுதி திமுக கூட்டணியில் இக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கட்சிகள், தங்களுக்கான விருப்ப தொகுதி பட்டியலை கொடுத்துள்ளது. அதில் இருந்து ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்து இக்கட்சிகளுக்கு இன்று தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
