எந்தெந்த தொகுதிகள்; மமகவும் பேச்சுவார்த்தை

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு, 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 2 தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக, ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர், திமுக குழுவிடம் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திமுகபேச்சுவார்த்தை குழுவிடம் விருப்ப தொகுதிகள் பட்டியலை கொடுத்துள்ளோம். ஏற்கனவே, நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாபநாசம், மணப்பாறை தொகுதியை தர வேண்டும் என கேட்டுள்ளோம். வாணியம்பாடி, திருச்சி கிழக்கு தொகுதிகளை பரிசீலிக்கும் படியும் கேட்டுள்ளோம்’’ என்றார்.

Related Stories: