சைக்கிளும் போச்சு… தாமரை மலருமா? பலம் வாய்ந்த திமுக தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்கிய அதிமுக-பாஜ: தாக்குபிடிப்பாரா ஜி.கே.வாசன்

சென்னை: பலம் வாய்ந்த திமுக தொகுதிகளை அதிமுக-பாஜ இணைந்து தமாகாவுக்கு தள்ளிவிட்டுள்ளது. இது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-பாஜ கூட்டணியில், தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தாமரை சின்னத்தில் தமாகா போட்டியிடுகிறது. ஜி.ேக.வாசன் கேட்ட தொகுதிகளை அதிமுக- பாஜ ஒதுக்கவில்லை என்பதால் தமாகாவினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கிடைக்கின்ற ஒன்று, இரண்டு தொகுதிகளையாவது நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கியிருக்கிலாம் என்று தமாகாவினர் கூட்டணி தலைமைக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எல்லாம் திமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிற தொகுதிகளாகும். அதுவும் 3 தொகுதிகளில் தற்போதைய அமைச்சர்கள் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களை எதிர்த்து தமாகா களம் காண்பது என்பது யோசிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் என்பது திமுகவின் கோட்டை மட்டுமில்லாமல், அது தற்போது அமைச்சராக உள்ள சக்கரபானியின் கோட்டை என்றே கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக சக்கரபாணியே அந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இந்த முறையும் திமுக சார்பாக சக்கரபாணியே போட்டியிடுகிறார்.

அடுத்ததாக ஈரோடு மேற்கு தொகுதி கடந்த 2021ம் சட்டமன்ற தேர்தலில் மூத்த அரசியல்வாதியான முத்துசாமி போட்டியிட்டு வென்றுள்ளார். இந்த முறையும் முத்துசாமியே போட்டியிடவுள்ளார். அடுத்தது திமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் தொகுதி கும்பகோணம், இந்த தொகுதியானது கடந்த 30 ஆண்டுகளாக திமுகவே தக்க வைத்துள்ளது. எனவே திமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாக இருப்பது கும்பகோனம். அடுத்த தொகுதி ராணிப்பேட்டை. இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று ராணிப்பேட்டை தொகுதியை தக்க வைத்துள்ளார் அமைச்சர் காந்தி, இஸ்லாமியர்கள் கனிசமாக இருக்கும் இந்த தொகுதியில் தமாகா தாமரை சின்னத்தில் நிற்கிறது.

அடுத்த தொகுதி கிள்ளியூர், கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவுள்ளது. எனவே தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 5 தொகுதியும் ஜி.கே.வாசனுக்கு சவாலாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை ஆகிய 3 தொகுதிகள் தற்போதைய திமுக அமைச்சர்கள் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களை எதிர்த்து போட்டியிடக்கூடிய நிலையில் ஜி.கே.வாசன் தாக்குபிடிப்பாரா? என்ற கேள்வியை அரசியல் விமர்ச்சகர்கள் எழுப்பியுள்ளனர்.

Related Stories: