×

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.77 ஆயிரம் பறிமுதல்

சூலூர், மார்ச் 25: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளபாளையம் குளம் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் 77 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி கடந்த 15-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதன்படி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது. அதற்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் சூலூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் குழுவினர் பள்ளபாளையம் குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த பசுபதி என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவர் 77 ஆயிரத்து 200 ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததை கண்டுபிடித்து உடனடியாக பறிமுதல் செய்து சூலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 

 

Tags : Sulur ,Pallapalayam pond ,Coimbatore district ,Tamil Nadu ,
× RELATED ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில்...