×

கோவை வழக்கறிஞர் சங்க தலைவராக பாலகிருஷ்ணன் தேர்வு

கோவை,மார்ச்25: கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து 2026-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் கோவை வழக்கறிஞர் சங்க அரங்கில் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், ரவீந்திரன், துணைத் தலைவர் பதவிக்கு அய்யப்பன், பிரபு சங்கர், திருஞானசம்பந்தம் ஆகியோர் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு ஆனந்தீஸ்வரன், சிவசாமி தமிழன், சுதீஷ், விஜயராகவன் ஆகியோரும் போட்டியிட்டனர்.

3,647 பேரில் 2,626 பேர் தங்களது ஓட்டை செலுத்தியிருந்தனர். நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 1,803 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்ற பாலகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவராக 1,241 ஓட்டுகள் பெற்ற அய்யப்பன், செயலாளராக 1,028 ஓட்டுகள் பெற்ற சுதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளராக உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய நிர்வாகிகள் ஏப்ரல் 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளனர்.

 

Tags : Balakrishnan ,Coimbatore Bar Association ,Coimbatore ,Coimbatore Bar Association Hall ,
× RELATED ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில்...