×

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

 

திருப்போரூர், மார்ச் 23: திருப்போரூரில் செயல்பட்டு வரும் அப்துல் கலாம் நடமாடும் நூலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசித்தல் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 13 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். அமைப்பின் செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சம்பத் போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக இணைச்செயலாளர் ஆசிரியர் குமார் வரவேற்றார். தேசத்தலைவர்கள், சிறுகதைகள், பொது அறிவு போட்டிகள், புதிர் கணக்குகள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 30 பேருக்கு தொழிலதிபர் குமார், கூடுவாஞ்சேரி திருக்குறள் மன்ற நிர்வாகி திருநாவுக்கரசு ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினர். முடிவில் அமைப்பின் இணைச்செயலாளர் மேரி ஸ்டெல்லா நன்றி கூறினார்.

Tags : Thiruporur ,Abdul Kalam Mobile Library ,
× RELATED கல்பாக்கம் அனுமின் நிலையம் அருகே...