×

நாவலூரில் துணை ராணுவப்படை மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு

 

திருப்போரூர், மார்ச் 23: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் 15 கம்பெனி துணை ராணுவப்படை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வந்துள்ளது. இதில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக இப்படையினர் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் மாமல்லபுரம் நகராட்சி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பேரூராட்சிகள், 100 ஊராட்சிகள் உள்ளன.
இந்நிலையில் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் துணை ராணுவப்படை மற்றும் மாநில போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று நாவலூர் ஓ.எம்.ஆர். சாலையில் துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. தாழம்பூர் காவல் நிலையத்தில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலை, நாவலூர் சந்திப்பு, தாழம்பூர் சாலை, பழண்டி அம்மன் கோயில் தெரு, டி.ஆர்.ஏ. அடுக்ககம் வரை தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Tags : Navalur ,Thiruporur ,Tamil Nadu ,
× RELATED கல்பாக்கம் அனுமின் நிலையம் அருகே...