×

பத்து தோல்வி பழனிசாமி இனி படுதோல்வி பழனிசாமி; டெல்லி அசம்பிள் பண்ண பீசு அதிமுக: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

 

கோவை முதலிபாளையம் பகுதியில் கோவை, நீலகிரி திமுக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். இந்த மேற்கு மண்டலம் திராவிட அரசின் கோட்டை என நிரூபித்து காட்ட வேண்டும். அதற்கு, இளைஞரணியின் பங்களிப்பு மிகவும் முக்கியம். இந்தியளவில் பல கட்சிகள் பூத் கமிட்டி கூட போட திண்டாடி வருகிறது. ஆனால், நாம் பூத்துக்கு ஒரு இளைஞர் அமைப்பை நியமித்து இருக்கிறோம். திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனையை மக்களிடம் சென்று கூற வேண்டும். அதிமுக தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வாரம் ஒரு முறை சென்று கொண்டு இருக்கிறார்கள். முதலில் திருட்டுத்தனமாக போனவர்கள் இப்போது வெளிப்படையாக சென்று வருகிறார்கள்.

தமிழ்நாடு உருவாக்கிய கட்சி திமுக, அதிமுக அமித்ஷாவின் அடிமை கட்சி. கார் மாறுதல், கால் மாறுதல் அடிமை கூட்டத்திற்கு புதிது இல்லை. பத்து தோல்வி பழனிசாமி, இந்த தேர்தலில் படுதோல்வி பழனிசாமியாக ஆவது உறுதி. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என அதிமுக கூட்டணியே ஏற்கவில்லை. அப்படி இருக்க தமிழ்நாடு மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். ஒரிஜினல் பிராண்ட் வந்தால் டூப்ளிகேட் பிராண்ட், அதாவது சைனா மேக் வரும். அது கொஞ்ச நாளில் வீணாகிவிடும். அது போல தான் அதிமுக ஒரு டெல்லி மேக். அது கொஞ்ச நாள் தான் இருக்கும். தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடும்.‌ அதிமுக ஒரு டெல்லியில் இருந்து அசம்பிள் பண்ண பீசு. அப்படி தான் அதிமுக கூட்டணி உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags : Palaniswami ,AIADMK ,Delhi ,Assembly ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Coimbatore ,Nilgiris DMK ,Mudalipalayam ,
× RELATED தஞ்சை பிரசாரத்தின்போது விபத்தில்...