- DMK தலைமையிலான கூட்டணி
- வி.கே.சி
- சென்னை
- திமுக
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: விசிக அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200 இடங்களுக்கும் மேலாக மகத்தான வெற்றியைப் பெற வேண்டும். அதற்கேற்ப தமிழகம் தழுவிய அளவில் கூட்டணி கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களோடு இணைந்து தீவிர முனைப்போடும் களப்பணி ஆற்றுவோம் என்று விசிக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி ஏப்ரல் 23’ 2026 அன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ வலதுசாரி பிற்போக்கு சக்திகளையும் அவர்களுக்கு மறைமுகமாக துணைநிற்கும் திரிபுவாத சக்திகளையும் வீழ்த்தி, 200 இடங்களுக்கும் மேலாக மகத்தான வெற்றியைப் பெற வேண்டும். அதற்கேற்ப தமிழகம் தழுவிய அளவில் கூட்டணி கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களோடு இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த பொறுப்புணர்வோடும் தீவிர முனைப்போடும் களப்பணி ஆற்றுவோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கட்டமைப்பில் மேள்கொள்ளப்பட்டுவரும் ‘மறுசீரமைப்பு நடவடிக்கை’ அரசியல் களத்தில் ஒரு புதிய முயற்சியாகும். கட்சியின் கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சனநாயகப்படுத்திக் கட்சியை அமைப்புரீதியாக வலிமைப்படுத்தியுள்ள தலைவர் இந்த உயர்நிலைக்குழு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணெய், எரிவாயு விலையை ஒன்றிய அரசு உயர்த்தப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறு செய்து ‘ஏழை எளிய மக்கள் மீது நிதிச் சுமையை ஒன்றிய பாஜ அரசு அதிகரிக்கச் செய்யக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதைக் காரணம் காட்டி தேர்தல் பறக்கும் படையினர் சிறு வணிகர்கள் தமது அன்றாடக் கொள்முதலுக்காக எடுத்துச் செல்லும் சிறு சிறு தொகைகளைக்கூட பறிமுதல் செய்வது அவர்களது வாழ்வாதாரத்தையே சிதைப்பதாக உள்ளது. பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு நெருக்கடி இல்லை. தமிழ்நாட்டில் இப்படி தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகச் செயல்படுவதை நிறுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கை தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று 2019ம் ஆண்டு முதல் இந்த கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்களிப்புச் செய்துள்ளது. எனவே, கட்சியின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ‘இரட்டை இலக்கத்தில்’ தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும், 2028 மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிகவுக்கு ஒரு இடத்தை கேட்டுப் பெற வேண்டும் ணெ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
