×

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 4 லட்சம் பணியாளர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு

 

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள சுமார் 4 லட்சம் பணியாளர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்க தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் சீருடனும் குற்ற மற்றும் நடைபெறுவதற்காக இந்த பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள், உதவி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், மைக்ரோ பார்வையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்ற உள்ளவர்கள் பங்கேற்க உள்ளனர். மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த பயிற்சியில், முதல் கட்டத்தில் தேர்தல் நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் பொது வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு அச்சுப்பொறி பயன்படுத்தும் நடைமுறை பயிற்சி வழங்கப்படுகிறது. மூன்றாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நாளில் எதிர்பார்க்கப்படும் சவால்கள், அவசரநிலைகளை கையாளும் விதிமுறைகள் மற்றும் புகார் தீர்வு செயல்முறைகள் குறித்து விரிவாக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு கட்டப் பயிற்சியும் மாவட்ட வாரியாக திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து பணியாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பயிற்சியின் தரத்தை உறுதிப்படுத்த மூத்த அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Tags : Chennai ,Tamil Nadu Assembly ,Chief Electoral ,Election ,
× RELATED தஞ்சை பிரசாரத்தின்போது விபத்தில்...