மன்னார்குடி, மார்ச் 21: மன்னார்குடி அருகே வாகன தணிக்கையில் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனச்சந்திரன் உத்தரவின் பேரில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு அப்படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலை பெட்ரோல் பங்க் அருகில் நேற்று மதியம் வேளாண் விற்பனை குழு கண்காணிப்பாளர் உதயகுமார், தலைமை காவலர் பிரபு, காவலர் பிரேம்நாத் ஆகியோர் அடங்கிய பழக்கப்படையினர் வாகன தனித்தன்மை கொண்டனர்.
