- கடவுச்சீட்டு சேவை வாகனம்
- தஞ்சாவூர்
- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
- திருச்சி பாஸ்போர்ட்…
தஞ்சாவூர், மார்ச் 21: பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகன 3 நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் ஆவணங்களை சரிபார்க்க அருகில் உள்ள விண்ணப்பதாரர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் கூறியிருப்பதாவது: கிராமப்புற, தொலைதூர மற்றும் போதிய சேவை கிடைக்காத பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு நேரடியாக பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதற்காக, வெளியுறவு அமைச்சகம் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் என்ற ஒரு முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
