×

அறந்தாங்கி அடுத்த கட்டுமாவடியில் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

 

அறந்தாங்கி, மார்ச் 21: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கட்டுமாவடியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையங்களை தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலின் 183- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் நாகன்யூ சிமிக் நேற்று 183 அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டுமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண்கள் 199-203 ஆகிய 5 வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதுக்கோட்டை தஞ்சாவூர் இணைப்பு கட்டுமாவடி சோதனைச் சாவடி அருகில் வாகனத் தணிக்கைசெய்து வந்த எஸ்எஸ்டி குழுவினரின் பணியினை ஆய்வு செய்து அறிவுறுத்தினார்.

Tags : Aranthangi ,Katumavadi ,Pudukkottai district ,Aranthangi Assembly ,
× RELATED கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில்...