×

என்எம்எம்எஸ் தேர்வு கீரமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை

 

புதுக்கோட்டை, மார்ச் 21: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் என்எம்எம்எஸ் தேர்வில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அரசு மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு என்எம்எம்எஸ் எனும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் வெற்றி பெறோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரையில் மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உதவித்தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.அதன் அடிப்படையில், அண்மையில் வெளியிடப்பட்ட இத்தேர்வுக்கான முடிவில் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஏ.யாழினி, எஸ்.ஜனனி, எஸ்.ஹர்சிதா, ஏ.தியாமாலினி, பி.பூமிகா, பி.கனிஷ்கா, ஆர்.மகாலட்சுமி, ஆர்.ஹனிஸ்கா ஆகிய 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் ட்ரஸ்ட் எனும் தேர்வில் எஸ்.வர்ஷினி, சி.பவநிதா, சி.ஷிவானி, கே.திவ்யதர்ஷினி ஆகிய 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். ஆண்டு தோறும் நீட் தேர்விலும் இப்பள்ளி மாணவிகள் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : NMMS ,Keeramangalam Girls Higher Secondary School ,Pudukkottai ,Keeramangalam Government Girls Higher Secondary School ,
× RELATED கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில்...