புதுடெல்லி: நிதி மோசடிகளால் 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ரூ.40 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இன்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடந்த நிதி மோசடி குறித்து இன்டர்போல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2025ல் நடந்த நிதி மோசடிகளால் உலகப் பொருளாதாரத்திலிருந்து ரூ.40லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய நிதி மோசடி அச்சுறுத்தல் மதிப்பீட்டில் இன்டர்போல் தெரிவித்துள்ளது.
இப்போது மோசடி செய்பவர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர். இது வழக்கமான மோசடிகளை விட 4.5 மடங்கு மோசடியாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு காலத்தில் பரவலாக இருந்த சைபர் மோசடி தற்போது மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா வரையிலும் பரவி உள்ளது. இதில் 80 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
