×

மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகை நிதி மோசடி 5 மாநில அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

 

புதுடெல்லி: மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகை நிதியில் மோசடி செய்ததாக 5மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், நோடல் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை உட்பட ஆறு உதவித்தொகை திட்டங்கள் இணைக்கப்பட்ட பின்னர் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மொத்த உதவித்தொகை திட்டத்தின் நிதியில் ரூ.11.4கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இந்த உதவித்தொகையானது 11 மற்றும் 12வது படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், மெட்ரிகுலேஷன், டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும். யூஜிசி/ ஏஐசிடிஇ-யால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்தில் இருந்தும் இளங்கலை மற்றும் டிப்ளமோ, முதுகலை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் இந்த உதவித்தொகையை பெறுவார்கள்.

இது குறித்து ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் செயலாளர் ஆகியோர் உதவித்தொகையில் மோசடி நடந்துள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் இது குறித்த விசாரணைணை தொடங்கினார்கள். விசாரணையில் நிதி உதவி பெறப்பட்டதாக கூறப்படும் இந்த நிறுவனங்கள் பல இல்லை அல்லது மூடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ஆனால் இவை தேசிய உதவித்தொகை போர்ட்டலில் இருந்து நிதியை கோருகின்றன என சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனர். விசாரணையின் அடிப்படையில், டெல்லி, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மற்றும் நோடல் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Tags : CBI ,New Delhi ,
× RELATED கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு...