குளச்சல், மார்ச் 13: குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளரை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடியபட்டணம் கிராமத்திலிருந்து 136 மீனவர்களும், முட்டம் சுற்று வட்டார கடற்கரை பகுதியை சேர்ந்த சுமார் 1300 மீனவர்கள் ஈரான், துபாய், ஓமன், கத்தார், சவுதி நாடுகளில் மீன்பிடித்தொழில் மற்றும் வேலைக்கு சென்றனர். தற்போது ஈரான்-இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரான் – இஸ்ரேல் போரால் உணவு, தங்கும் இடம், தண்ணீர், மருத்துவ வசதியில்லாமல் உள்ளனர். குடும்பத்தாருடன் தொடர்பில்லாமலும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களை துரிதமாக குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கும், உயிர் மற்றும் உடமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே, தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
ஈரான் போரால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும் தலைமை செயலாளரிடம் பிரின்ஸ் எம்எல்ஏ மனு
- இளவரசன்
- சட்டமன்ற உறுப்பினர்
- பிரதம செயலாளர்
- ஈரான்
- Kulachal
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- காடியபட்டினம்
- முட்டம்…
