சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டம், மார்ச் 13 : சமையல் எரிவாயு கேஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று குழித்துறை அடுத்த திருத்துவபுரம் பகுதியில் குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா ரவிசங்கர் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங்,மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், தட்டுப்பாடின்றி சீராக சமையல் கேஸ் விநியோகம் செய்ய கேட்டும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பால்ராஜ் மற்றும் மாநில, மாவட்ட , வட்டார மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: