காட்டுமன்னார்கோவில், மார்ச் 13: காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள எள்ளேரி கிராமப் பகுதியில் வசிப்பவர் அப்துல் ஹமீது (42). இவவர் 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடத்தில் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அப்துல் ஹமீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி ஆனது. இதையடுத்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அப்துல் ஹமீதை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
